தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

Aadmika
Jun 20, 2023,03:01 PM IST

சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி,  தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழையால் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.