ப்ளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்?...அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Aadmika
Mar 19, 2023,04:04 PM IST
சென்னை : ப்ளஸ் 2 தேர்வு எழுதாமல் 50,000 க்கும் அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி, நடந்து வருகிறது. இதில் முதல் தேர்வாக மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளே 50,000 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஒரே நாளில், அதுவும் பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் தவிர்த்த விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பாக விசாரைண நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆப்சென்ட் ஆன மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இதுவரை பள்ளிகளில் டிசி வாங்கவில்லை. இதனால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

இவர்களும் ப்ளஸ் 2 தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டதால் தான் இவ்வளவு அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக தெரிகிறது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால் தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.