கோவில்களில் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

Baluchamy
Mar 13, 2023,08:21 PM IST

சென்னை : தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கோவில் திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவதும் ஆடல் பாடல்  நிகழ்ச்சி மற்றும் குறவன் - குறத்தி ஆட்டம் தான். கோவில் திருவிழாவின் பொது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்களோ இல்லையோ ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும் குறவன் - குறத்தி நிகழ்ச்சியை பார்க்க ஒரு தனி கூட்டமே எதிரிப்பார்த்து காத்திருக்கும். 



இவ்வாறு சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த இரு நிகழ்ச்சிகள் நடனம் என கூறிக்கொண்டு ஆபாசமாக இருப்பது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுப்பப்பட்டு பல கோவில்களில் தடை விதிக்கப்பட்டன. 


ஆடல் பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து குறவன் - குறத்தி ஆட்டமும் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடனம் என கூறிக்கொண்டு கோவில் திருவிழாக்களில் ஆபாசமாக நடனம் ஆடுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மேலும் முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிட்டிடப்பட்டது. கோவில் திருவிழாக்களில் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு அனுமதி பெற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.