பட்ஜெட் ஆலோசனை : மார்ச் 09 ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

Aadmika
Feb 27, 2023,03:53 PM IST
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 09 ம் தேதி கூட உள்ளது. இதில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் குறித்த ஆலோசனை செய்வதற்காகவும், அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.


வெறி ஏத்தும் இந்தியன் 2 அப்டேட்... கமல்ஹாசனுக்கு இத்தனை வில்லன்களா ? 


பட்ஜெட் அறிக்கை, வேளாண் பட்ஜெட் அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பார்க், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.