தமிழக பட்ஜெட் கூட்டம் துவங்கியது...பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Aadmika
Mar 20, 2023,09:24 AM IST

சென்னை : தமிழக பட்ஜெட் தொடர் இன்று (மார்ச் 20) தமிழக சட்டசபையில் துவங்கி உள்ளது. தமிழக நிதியைமச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023-2024 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து உரையாற்றினார். 


அவர் தனது உரையில், திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அம்பேத்காரின் நூல்களை மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்.இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.220 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.




முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன


தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-1


தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-2





தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-3