இனி ஒர்க் ஃபிரம் ஹோம் கிடையாது.. "அச்சச்சோ".. பெண் ஊழியர்களை இழக்கும் டிசிஎஸ்!

Aadmika
Jun 14, 2023,10:12 AM IST

மும்பை : இனி ஒர்க் ஃபிரம் ஹோம் முறை கிடையாது என இந்தியாவில் மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அறிவித்துள்ளது. இதனால் பல பெண் ஊழியர்கள் இழக்கும் சூழலில் அந்நிறுவனம் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகும் டிசிஎஸ்.,ல் வேலை செய்யும் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர். இதனால் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளி்ல் இருந்தும் கூட பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது கொரோனா காலத்தில் வீ்டடில் இருந்து பணி செய்த ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வைக்க டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.



ஆனால் இதற்கு பெண் ஊழியர்கள் பலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இனி யாருக்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் முறை கிடையாது என டிசிஎஸ் கண்டிப்பாக சொல்லி உள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் பலர் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆண் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவது போல் பெண் பணியாளர்களையும் அலுவலகத்திற்கு வரவழைத்து, இதனால் பாலின பாகுபாடு ஏற்படுவதை தவிக்க நினைத்து டிசிஎஸ் எடுத்த முடிவு தற்போது அதற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. 

ஒர்க் ஃபிரம் ஹோம் முறை டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சமீப ஆண்டுகளாக பெரிதும் கைகொடுத்தது. திறமையான பணியாளர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் வீடு -அலுவலகம் என்ற டென்சன் இல்லாமல் பணியாற்றி வந்தனர். தற்போது இவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

உலக வங்கி அளித்துள்ள புள்ளி விபரத்தின் படி சீனாவில் உள்ள 61 சதவீதம் பெண் ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். இது பொருளாதா வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறி இருந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில் 36 சதவீதம் பேர் பெண் ஊழியர்கள் தான்.