செக்ஸ் ஒரு "விளையாட்டு".. ஸ்வீடன் பிரகடனம்.. சாம்பியன்ஷிப் "போட்டி"யும் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jun 05, 2023,04:35 PM IST

ஸ்டாக்ஹோம்: பாலியல் உறவை ஒரு விளையாட்டாக ஸ்வீடன் நாடு அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியையும் நடத்தப் போவதாக அறிவித்து பிற்போக்காளர்களை அலற விட்டுள்ளது.


ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 8ம் தேதி தொடங்கி ஆறு வாரங்களுக்கு நடைபெறுமாம். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 6 மணி நேரம் வரை செக்ஸில் ஈடுபடலாம். இவர்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை நடுவர்கள் குழுவைக் கொண்டு தேர்வு செய்து வெற்றியாளர்களை அறிவிப்பார்களாம். நடுவர் குழு தவிர பொதுமக்களுக்கும் இவர்களுக்கு மார்க் தரும் வாய்ப்பு வழங்கப்படுமாம்.




போட்டியாளர்கள் தினசரி குறைந்தது 45 நிமிட நேரம் செக்ஸில் ஈடுபட வேண்டும். அதிகபட்சம் 6 மணி நேரம் வரை போகலாமாம். யார் அதிக நேரம் உறவில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.


மொத்தம் 3 லெவல்களில் போட்டிகள் நடைபறும். ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்களுக்கு பாயின்ட் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தடுத்த லெவலுக்கு அவர்கள் முன்னேறுவார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 10 புள்ளிகள் வரை தரப்படும். 5 நீதிபதிகள் கொண்ட குழு மற்றும் மக்கள் வாக்கு மூலம் இந்த புள்ளிகள் நிர்ணயிக்கப்படுமாம்.


ஜோடிகளின் கெமிஸ்ட்ரி, செக்ஸ் குறித்த அவர்களது புரிந்து கொள்ளும் திறன், அவர்களது ஆர்வம், ஈடுபாடு, உறவில் ஈடுபடும் நேரம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுமாம்.


இதுகுறித்து ஸ்வீடன் செக்ஸ் சம்மேளனத் தலைவர் டிராகன் பிராடிச் கூறுகையில், ஒரு நாள் உலகம் முழுவதும் செக்ஸ் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.  செக்ஸ் கல்வி அவசியமானது. அதுகுறித்து புரிதல் மிக மிக முக்கியம். செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒருவரது உடல் நலனை மட்டுமல்ல மன நலனுக்கும் முக்கியமானது. மன ரீதியாக பல பலன்களைத் தருகிறது செக்ஸ்.


எல்லா விளையாட்டு போலவேதான் செக்ஸும். அதற்கும் பயிற்சி தேவை. அதிலும் முறையாக ஈடுபட வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான் இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் போட்டியில் வெற்றியும், தோல்வியும் கிடையாது. பரஸ்பரம் புரிந்து கொண்டு யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே இங்கு முக்கியமானது என்றார் பிராடிச்.