ஸாரி.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. மன்னிப்பு கேட்டார் சிங்கப்பூர் சபாநாயகர்!
Jul 11, 2023,02:13 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர், டான் சுவான் ஜின், எதிர்க்கட்சி எம்.பியைப் பார்த்து தகாத வார்த்தையை பிரயோகித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம் பெற்ற விவாதம் ஒன்றின்போது இந்த சம்பவம் நடந்தது. அப்போது நடந்த சம்பவத்திற்காக இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் சபாநாயகர் டான் சுவான் ஜின்.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் விக்ரம் நாயர் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜமுஸ் லிம் என்பவரை சபாநாயகர் பேச அழைத்தார். அப்போது "f**** populist" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.