ரூ. 905 கோடி சொத்து.. இந்தா வச்சுக்க.. 30 வயது கேர்ள் பிரண்ட்டுக்கு எழுதி வைத்த "பிரதமர்"!

Su.tha Arivalagan
Jul 10, 2023,03:15 PM IST
ரோம்: சமீபத்தில் மறைந்த முன்னாள் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது ரூ 905 கோடி மதிப்பிலான சொத்துக்களை 30 வயதான தனது காதலி (மார்ட்டா பாசினா) க்கு எழுதி வைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான அவரது உயில் வெளியாகியுள்ளது. 

மூன்று முறை இத்தாலி பிரதமராக இருந்தவர் பெர்லுஸ்கோனி. சமீபத்தில் பெர்லுஸ்கோனி மரணமடைந்தார். இவரது உயில் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனது மொத்த சொத்திலிருந்து ரூ. 905 கோடி சொத்துக்களை 30 வயதான தனது காதலியும் கடைசி  நேரத்தில் உடன் இருந்தவருமான மார்ட்டா பாசினோவுக்கு எழுதி வைத்துள்ளார் பெர்லுஸ்கோனி.



2020ம் ஆண்டு  மார்ச் மாதத்திலிருந்து பெர்லுஸ்கோனியுடன் உறவில் இருந்து வந்தார் மார்ட்டா. இருவரும் முறைப்படி திருமணம் எல்லாம் செய்து கொள்ளவில்லை. ஆனால் மரணப்படுக்கையில் இருந்தபோது மார்ட்டாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தார் பெர்லுஸ்கோனி.

மார்ட்டா ஒரு எம்.பி. ஆவார். 2018 தேர்தலில் ஜெயித்து எம்பி ஆனவர். பெர்லுஸ்கோனி 1994ம் ஆண்டு அரசியலில் நுழைந்தபோது உருவாக்கிய போர்ஸா இத்தாலியா என்ற கட்சியின் உறுப்பினர்தான் மார்ட்டா. அதாவது தொண்டராக உள்ளே வந்து கட்சித் தலைவரையே கவிழ்த்துப் போட்டவர்தான் மார்ட்டா.

பெர்லுஸ்கோனி பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்கானவர் என்பது உலகம் அறிந்தது. பெர்லுஸ்கோனியின் வர்த்தகம் முழுவதையும் அவரது மூத்த பிள்ளைகளான மரீனா மற்றும் பியர் சில்வியோ ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள். இவர்களுக்கு குடும்பச் சொத்தில் 53 சதவீதம் எழுதித்தரப்பட்டுள்ளது.

இதுதவிர தனது தம்பி பாலோவுக்கு 100 மில்லியன் ஈரோ, பெர்லுஸ்கோனியின் உற்ற நண்பரான மார்செல்லோ டெல் உட்ரிக்கு 30மில்லியன் ஈரோ என சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார் பெர்லுஸ்கோனி.