"வெயில் எதிரொலி"... தமிழ்நாட்டில்.. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு.. அரசு அறிவிப்பு

Su.tha Arivalagan
May 26, 2023,11:23 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜூன் 5ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 




ஆனால் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திட்டமிட்டபடியே பள்ளிகள்திறக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் கூறி வந்தார்.


இந்த நிலையில் இன்று காலை புதிய அறிவிப்பை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.அதன்படி பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரு தேதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தேர்வு செய்யும் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7ம் தேதி அனைதது வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுரையின்பேரில் இந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.