இந்திய சினிமாவின் முதல் நடிகர்...கமலை முந்திய சத்யராஜ்

Aadmika
Jul 31, 2023,05:08 PM IST
சென்னை : தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த பெருமை கமலுக்கு தான் உண்டு. ஆனால் தற்போது இந்த பெருமையை கமலை முந்திக் கொண்டு சத்தியராஜ் பெற்றதுடன் இந்தியாவின் முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே AI எனப்படும் artificial intelligance தொழில்நுட்பம் பற்றிய பேச்சு தான் உலகம் முழுவதும் பெரும்பாலான துறைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள பல டூல்களை பயன்படுத்தி பல வித்தியாசமான வேலைகளை செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்து வருகின்றனர்.

பழைய ஆங்கில படம் ஒன்றில் இளமை கால மம்முட்டி, மோகன்லால், ஃபகத் ஃபாசில் நடித்தது போன்ற காட்சியை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தனர். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய வீடியோவை அப்படியே மாற்றி சிம்ரன் ஆடியதாக உருவாக்கி அசர வைத்தனர். தற்போது de-aging டூல் மூலம் ஒருவரின் வயதை குறைத்து, அவரை இளமை தோற்றத்தில் காட்டும் முயற்சியில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் இறங்கி உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலேயே இந்த தொழில்நுட்பம் மூலம் கவலை இளமை தோற்றத்தில் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் அது முடியாமல் போனதால் அதை கைவிட்டனர். தற்போது இந்தியன் 2 படத்தில் கவலை இளமை தோற்றத்தில் காட்ட டைரக்டர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதற்கான வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார். 

ஆனால் அதற்குள் கமலை முந்திக் கொண்டு சத்யராஜ் இதை செய்து விட்டார். சத்யராஜ் தற்போது குகன் சென்னியப்பன் இயக்கும் வெப்பன் படத்தில் நடித்து வருகிறார். வசந்த் ரவி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சத்யராஜை அவர் 30 வயதில் இருக்கும் தோற்றத்தில் காட்டி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நடிகரின் வயதை குறைத்து படமாக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.