இனி உங்க போன் நம்பரை நீங்களே முடிவு செய்யலாம்.. அசத்தும் ஜியோ

Aadmika
Jul 07, 2023,03:08 PM IST
டெல்லி : ஜியோ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நம்முடைய போன் நம்பரை நாமே முடிவு செய்ய முடியும்.

புதிய சிம் அல்லது போன் இணைப்பு பெற்றால் அந்த டெலிகாம் நிறுவனம் வழங்கும் போன் நம்பரை தான் நாம் பயன்படுத்த வேண்டும். நாம் விரும்பும் நம்பர் அல்லது பேன்சி நம்பரை பெற வேண்டும் என்றால் டெலிகாம் நிறுவனத்திற்கு தனியாக கட்டணம் செலுத்தி பெற வேண்டிய நிலை இருந்தது.



ஆனால் ரிலையன்ஸ் ஜியோ இந்த விளையாட்டை மாற்றி உள்ளது. சாய்ஸ் நம்பர் ஸ்கீம் என்ற புதிய திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு இரண்டுக்கும் பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோவின் சாய்ஸ் நம்பர் திட்டத்தில் உங்களின் புதிய ஜியோ நம்பரின் கடைசி 4 முதல் 6 இலக்கங்களை நீங்களே உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம்.

உங்களின் அதிர்ஷ்ட எண், பிறந்த தேதி, உங்களுக்கு பிடித்த எண்களின் வரிசை என எப்படி வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். இப்படி உங்கள் விருப்பம் போல் போன் நம்பரை அமைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1. Jio.com இணையதளத்திற்கு சென்று self care section பகுதிக்கு செல்ல வேண்டும். அல்லது MyJio ஆப்பிலும் சென்று இதை மாற்றிக் கொள்ளலாம்.

2. choice number பகுதிக்கு சென்று, ப்ரீபெய்டு அல்லது போஸ்ட் பெய்டு ஜியோ நம்பரில் நீங்கள் விரும்பும் கடைசி 4 முதல் 6 எண்களை டைப் செய்ய வேண்டும். உங்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் படியான எண்களை தேர்வு செய்வது முக்கியம்.

3. நம்பரை தேர்வு செய்த பிறகு பேமன்ட் பகுதிக்கு சென்று ரூ.499 கட்டணம் செலுத்த வேண்டும். 

4. உங்கள் கணக்கில் இருந்து பணம் பெறப்பட்டதும் அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் விருப்ப எண் உடனான ஜியோ நம்பர் ஆக்டிவேட் ஆகி விடும்.