ராஷ்மிகாவிடம் லட்சக்கணக்கில் ஆட்டைய போட்ட மேனேஜர்... ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு

Baluchamy
Jun 20, 2023,10:46 AM IST
ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனாவை அவரது நம்பிக்கைக்குரிய மேனேஜர் ஏமாற்றிவிட்டதாக வெளியான தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோயினாக கலக்கி வருகிறார். குறிப்பாக தற்போது ஹிந்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி செம ஹிட்டானது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 



இப்படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் சந்தீப் ரெட்டி, ரன்பீர் கபூர், அனில் கபூர் ஆகியோருடன் 'அனிமல்' படத்தில் நடித்து வருகிறார். கைநிறைய பட வாய்ப்புகளை வைத்திருக்கும் ராஷ்மிகா கேப்பில் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இப்படியாக காலில் சக்கரம் கட்டியது போல் சினிமாவில் செம பிஸியாக இருக்கும் ராஷ்மிகாவை அவரின் மேனேஜர் ஏமாற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகை ராஷ்மிகாவின் சினிமா வாழ்கை தொடங்கியது முதலில் இருந்தே அவரது மேனேஜர் தான் உறுதுணையாக இருந்தாராம். படங்களை புக் செய்வதில் இருந்து கணக்கு வழக்குகளை பார்ப்பது வரை அனைத்தையும் ஒன் மேன் ஆர்மியாக அவரது மேனேஜர் தான் பார்த்துக் கொண்டாராம். இப்படியாக முழு பொறுப்பையும் மேனேஜர் கையில் ஒப்படைத்த ராஷ்மிகா தற்போது ஏமாற்றப்பட்டுள்ளார். அவரது மேனேஜர் ராஷ்மிகாவின் கணக்கில் இருந்து சுமார் 80 லட்சம் ரூபாயை அபேஸ் செய்ததாக தெரியவந்துள்ளது. 

இதனால் ஷாக்கான ராஷ்மிகா மேனேஜரை உடனடியாக வேலையே விட்டு நீக்கிவிட்டாராம். நீண்ட நாள் நம்பிக்கையை சுக்குநூறாகிய மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் சைலண்டாக நீக்கிவிட்டார். தற்போது இந்த தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.