பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. ரஃபேல் நடால் பங்கேற்க மாட்டார்!

Aadmika
May 19, 2023,03:19 PM IST
பாரிஸ் : 2023 ம் ஆண்டிற்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பானிஷ் நாட்டு வீரரான ரஃபேல் நடால் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் போட்டியில் பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ம் ஆண்டு முதல் ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். முதல் போட்டி துவங்கி தொடர்ந்து 14 ஆண்டுகள் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ரஃபேல்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இதுவரை ரஃபேலை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு ரஃபேல், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளது. 



ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் போது அவருக்கு இடது பக்க இடுப்பில் ஏற்பட்ட காயம் இதுவரை சரியாகவில்லை என சொல்லப்படுகிறது. 36 வயதாகும் ரஃபேல் மார்ச்சில் நடந்த போட்டியிலேயே பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பார்வையாளராக மட்டுமே அதில் பங்கேற்றார்.

காயம் காரணமாக சிகிச்சையில் இருந்து வரும் ரஃபேல் அடுத்த ஆண்டு ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது அவரது ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதே சமயம் தொடர்ந்து 14 ஆண்டுகள் ரஃபேல் தன் வசமாக்கி வைத்திருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியஷிப் பட்டத்தை இந்த ஆண்டு யார் கைப்பற்ற போகிறார், ரஃபேல் இடத்தை கைப்பற்ற போகிறவர் யார் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.