அரச குடும்பத்தில் புகைச்சல்.. ஆஹா.. "நாஸ்டிரடாமஸ்" ஜோசியம் பலிக்க ஆரம்பிச்சிருச்சு போலயே!
லண்டன் : கருத்து வேறுபாடு காரணமாக இங்கிலாந்து அரச குடும்ப வாரிசான இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் 2020 ம் ஆண்டே அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டனர். மீடியாக்கள், அரச வாழ்க்கை என அனைத்தில் இருந்தும் விலகி அமெரிக்காவில் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் தற்போது வரை அரச குடும்பத்தினர் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் ஹேரி பற்றி செய்திகள் மீடியாக்களில் மிக குறைவாகவே வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்தார்.
அவரது இறுதி சடங்கில் ஹேரி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மீடியாக்களின் பார்வை ஹேரி பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்பாவும், சகோதரரும் எனக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் என்னுடன் சமாதானம் பேச தயாராக இல்லை என்றார்.