ப்ளஸ் 2 பொதுத் தேர்வு : முதல் நாளே 50,674 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

Aadmika
Mar 14, 2023,11:51 AM IST

சென்னை : ப்ளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளிலேயே 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ம் தேதியான நேற்று ப்ளஸ் 2  பொதுத்தேர்வுகள் துவங்கின. அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ப்ளஸ் 2 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். முதல் தேர்வான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. ஆனால் முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



மொத்தம் 8,51,303 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 8.01,744 மாணவ, மாணவிகள் மட்டுமே நேற்று தேர்வு எழுதி உள்ளதாகவும், இத்தனை பேர் ஒரே நாளில் தேர்வு எழுதாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.