பெரியார் பல்கலைக்க பட்டமளிப்பு விழா.. ஆளுநர் சனாதனத்தை அணிந்து வரக் கூடாது.. சு. வெங்கடேசன்

Su.tha Arivalagan
Jun 27, 2023,10:49 AM IST

சேலம்: பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசனம் கடும் விமர்சனம்  செய்துள்ளார்.


ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று  சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.




பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்.


சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர். என். ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார். இந்த விழா தடர்பாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளளர் கு. தங்கவேல் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 


அந்த சுற்றறிக்கையில், விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 




இந்த சுற்றறிக்கையை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு கருத்தையும் வெளியிட்டுள்ளார்.


அதில், ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று  சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சு. வெங்கடேசன்.