ஆரம்பித்த வேகத்தில்.. பப்புவா நியூகினியா பிரதமருக்கு டிவிட்டர் வைத்த ஆப்பு!

Aadmika
May 23, 2023,11:49 AM IST
டெல்லி : இந்திய பிரதமர் மோடியை சந்தித்த  உற்சாகத்தில் இருக்கும் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மரேப், மோடியைப் புகழ்வதற்காக டிவிட்டருக்கு வந்தார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அந்தப் பக்கத்தை டிவிட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்து விட்டது. 

இதுவரை டிவிட்டரில் இடம் பெறாமல் இருந்தார் ஜேம்ஸ் மரேப். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றிருந்தார். அப்போது மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் மரேப். மேலும் மோடி குறித்து நெகிழ்ச்சியுடனும் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் டிவிட்டருக்கு வந்தார் மரேப்.  கணக்கு துவங்கியதும் அவர் போட்ட முதல் போட்டோவே மோடியின் பப்புவா நியூ கினியா வருகை போட்டோக்களை தான்.



பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். சிறிய நாடான பப்புவா நியூ கினியாவிற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். அந்த நாட்டு வழக்கப்படி எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தது கிடையாதாம்.

ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி, இரவு 10 மணிக்கு மேல் பிரதமர் மோடி அந்நாட்டில் தரையிறங்கிய போதும் அந்நாட்டு பிரதமர், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து 19 குண்டுகள் முழங்க வரவேற்றனர். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்கியதுமே, அவரது காலைத் தொட்டு வணங்கி பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் வரவேற்றது தான் இதன் ஹைலைட்டே. இந்த வீடியோ, போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகின.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு தான் ட்விட்டரில் முதல் முறையாக கணக்கே துவங்கி உள்ளார் பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரேப். மனுஷன், மோடியின் தீவிர ஃபேன் ஆகி விட்டார் போல. ட்விட்டரில் கணக்கை துவங்கியதுமே, மோடியின் வருகை தொடர்பான போட்டோக்களை வரிசையாக பதிவிட்டு வருகிறார். அதோடு, "மோடிஜி எங்களை விட வயதில் பெரியவர். அதனால் மரியாதை அடிப்படையில் அவரது காலில் விழுந்தேன்" என ட்வீட் போட்டுள்ளார்.

சிறிது நேரத்திலேயே மோடியுடன் எடுத்துக் கொண்ட இன்னும் சில போட்டோக்களை பதிவிட்டு, மோடி போன்ற ஒரு பெரிய தலைவர் தங்கள் நாட்டிற்கு வருவது மிகப் பெரிய பெருமை, கெளரவம் என குறிப்பிட்டு மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். நம்ம ஊர் பாஜக ஐடி விங்குகளில் உள்ளோரை விட அதி வேகமாகவும், அதிகமாகவும் மோடி புகழ் பாடி வந்தார் மரேப். விட்டால் மோடிக்கு ரசிகர் மன்றமே துவக்கி விடுவார் போல என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அதில் டிவீட்டுகள் இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது அந்தப் பக்கத்தை டிவிட்டர் நிறுவனம் முடக்கி விட்டது. விதிமுறைகளுக்குப் புறம்பாக செயல்பட்டதால் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரேப் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மட்டு���ே பாலோ செய்தார். அதேசமயம், அவரது கணக்கில் அதி வேகமாக பலரும் பாலோயர்களாக இணைந்து வந்தனர். தற்போது கணக்கு முடக்கப்பட்டிருப்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.