Budget 2023: அரசு துறைகளில் பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும்

Aadmika
Feb 01, 2023,12:10 PM IST
புதுடில்லி : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் இனி பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கள் விபரம் :



* ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்
* பழைய வாகன ஒழிப்புக்கு கூடுதல் நிதி
* அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும்
* சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி
* 7.5 % வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* வாகன புகையை பூஜ்ஜியமாக்க புதிய திட்டம்.
* அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு