"பேய் மழை வரும்.. திகுதிகுன்னு தீப்பிடித்து எரியும்".. பதற வைக்கும் ஸ்வர்ணலதா!
Jul 10, 2023,01:26 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பேய் மழை பெய்யும்.. அதேபோல பெருமளவில் தீவிபத்துகளும் நடைபெறும் என்றி கூறி அதிர வைத்துள்ளார் "ஆரக்கிள்" ஸ்வர்ணலதா.
ஓங்குதாங்கான குரலில் பாடி கலக்கும் ஸ்வர்ணலதாவை நமக்குத் தெரியும்.. அது யாரு இந்த ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று நீங்க கேட்கும் மைன்ட் வாய்ஸ் இங்கேயும் கேட்குது. வாங்க தொடர்ந்து படிப்போம்.
தெலங்கானாவைச் சேர்ந்தவர்தான் இந்த ஸ்வர்ணலதா. இவருக்கு ஆரக்கிள் ஸ்வர்ணலதா என்று பெயர். இவர் பல்வேறு கணிப்புகளைக் கூறுவது வழக்கம். அதில் பல நடந்ததில்லை.. சில நடந்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து இவர் கணிப்புகளைக் கூறி வருகிறார். குறிப்பாக தெலங்கானாவில் புகழ் பெற்ற போனலு பண்டிகையின்போதுதான் இவர் கணிப்புகளை வெளியிடுவார்.
இந்த முறை செகந்தராபாத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் நடந்த திருவிழாவின்போது அதிர வைக்கும் பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்வர்ணலதா கூறுகையில், போன வருடம் பூஜைகள் சரியாக நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை பரவாயில்லை, சிறப்பாகவே செய்துள்ளனர்.
போன முறை மழை பொய்த்தது. இந்த முறை அப்படி இருக்காது. எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்யும். அதாவது பேய் மழை பெய்யும். ஆனால் சற்று லேட்டாக பெய்யும். அபரிமிதமாக அது இருக்கும்.
அதேபோ மாநிலத்தில் தீவிபத்துகளும் அதிகம் இருக்கும். அதையும் நாம் பார்க்கப் போகிறோம். ஆனால் பக்தர்கள் பயப்பட வேண்டாம். நான் அவர்களை பாதுகாப்பேன். அது எனது கடமை.
பூஜைகள் தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் நல்லது.. இதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார் ஸ்வர்ணலதா.