எதிர்கட்சிகள் கூட்டம் : சோனியா காந்திக்கு தலைவர் பதவி...கூட்டணிக்கு பெயர் வைக்கவும் ஆலோசனை
Jul 18, 2023,12:07 PM IST
பெங்களூரு : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, புதிய கூட்டணி அமைத்து வருகின்றன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் 15 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது.
நேற்றும், இன்றும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு சோனியா காந்தியை தலைவராகவும், நிதிஷ்குமாரை துணை தலைவராகவும் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.