இனி இப்படி தான் வண்டி ஓட்டனும்...சென்னைவாசிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Aadmika
Jun 20, 2023,05:04 PM IST
சென்னை : சென்னைவாசிகளள் எந்தெந்த வாகனங்களை எந்தெந்த வேகத்தில் இயக்க வேண்டும் என புதிய வானக கட்டுப்பாடு, அதுவும் எந்த நேரத்தில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்ற விபரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையிங் காலை 7 மணி முதல் இரவு 10 வரை சராசரியாக 40 கி.மீ., வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ., வேகமும் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை. நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமிரா மூலம் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.



கார், பைக், வேன் ஆகியன காலை 7 முதல் இரவு 10 வரை 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அதே போல் இரவு 10 முதல்காலை 7 வரை 50 கி.மீ., வேகத்திலேயே இயக்க வேண்டும். ஆட்டோக்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 25 கி.மீ. வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 35 கி.மீ., வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும். கனரக வாகனங்கள் காலை 7 முதல் இரவு 10 வரை 35 கி.மீ., வேகத்திலும், இரவு 10 முதல் காலை 7 வரை 40 கி.மீ. வேகத்திலும் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.