ஒரு பொய்யாவது சொல் கண்ணே..  ஆனால் சரியா.. தவறா?

Su.tha Arivalagan
Jun 30, 2023,02:35 PM IST
- சுபா

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே".. இப்படி சினிமாவில் பாட்டுப் பாடி கேட்டிருப்போம்.. ஏன் மகிழ்ந்தும் போயிருப்போம்..ஆனால் நிஜத்தில் பொய் சொல்வது சரியா.. தவறா?

இந்த விவாதம் ரொம்ப காலமாகவே இருக்குங்க. "பொய் சொல்வது தவறு.. இனிமேல் பொய் சொல்லாதே" என்று அம்மா சின்ன வயதில் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்.. ஆனால் அதே  சின்ன வயதில்தான்.. திருவள்ளுவரின் ஒரு திருக்குறளும் நமது மூளைக்குள் புகுத்தப்பட்டது.. அதில் இடமறிந்து பொய் சொல்லலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படீன்னா பொய் சொல்லலாமா.. கூடாதா! இந்தக் குழப்பத்திற்கு இதுவரை விடை இல்லை.



உண்மையில், பொய் சொல்றது சரிதான்னு சொல்லமுடியாது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப தட்ப வெப்ப நிலை மாறுவது போல ஒவ்வொரு மனித மனநிலை மற்றும் சூழ்நிலைகளை பொறுத்தே நமது செயல்பாடுகளும், பேச்சும் பல நேரங்களில் அமைகிறது. எல்லோரிடமும் நாம் ஒரே மாதிரி பேசுவதில்லை.. பொய்  சொல்வதும் கூட அப்படித்தான்.

வள்ளுவரே சொல்வது போல.. ஒரு பொய் சொல்றதால பல உயிர்களை நாம காப்பாத்த முடியும்னா.. அப்போ பொய் சொல்றது சரிதாங்க.. ஆனால் .அதே ஒரு சின்ன பொய் சொன்னா பல உயிர்களுக்கு ஆபத்து வரும்னா.. அதைத் தவிர்ப்பதுதாங்க சரி. 

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாண பன்னலாம்னு ஒரு பழமொழி இருக்கு கேள்விப்பட்டு  இருப்பீங்க.. ஆனால் இப்ப எல்லாம் ஒரு பொய் சொன்னாலே divorce போய் முடிஞ்சிருது. இதுல எப்படிங்க ஆயிரம் பொய் சொல்றது..??.. அந்தப் பழமொழிக்கு அர்த்தமே வேற.. அதற்கு சரியான அர்த்தம் நம் உறவினர்களுடன், எவ்வளவு பகை இருந்ததாலும் ஆயிரம் முறை போயாவது அவர்களை  அழைத்து வர வேண்டும்.. இதுதான் அந்தப் பழமொழியோட அர்த்தம். 

முடிஞ்சவரை நேர்மையா இருக்கப் பாருங்க.. அதுதாங்க எல்லோருக்கும் நல்லது, ஏன் நமக்குமே கூட நல்லது. 
ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ற நிலைமை வரும்.. அதனால் நமக்கு தேவையில்லாத மன உளைச்சல்களும், பதட்டமும், பிரச்சினைகளும்தான் ஏற்படும். அதுனால ஒரு பொய் சொல்றதுக்கு முன்னாடி பல முறை யோசிச்சி பேசணும்.. இது இப்ப அவசியமா, அவசியமா பேசியே ஆகணுமான்னு யோசிங்க.. அந்த இடத்தில் Ego பார்க்காதீங்க.. உணர்வுப்பூர்மாக சிந்திப்பதை விட .. எதார்த்தமாக சிந்தித்துப் பார்க்கப் பழகினால் பொய் சொல்வது அடியோடு குறைந்து விடும்.

இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.. பொய் சொல்வது நல்லதா இல்லை கெட்டதான்னு!