மே 03 - இந்த நாளில் என்னவெல்லாம் சிறப்பு உள்ளது ?
இன்று மே 03, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 20
பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.51 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.52 வரை மரணயோகமும், அதன் பிறகு சித்த யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
அபிஷேகம் போன்ற வழிபாடுகள் செய்வதற்கு, நீர் நிலைகள் தொடர்பான வேலைகளை மேற்கொள்ள, வாகனம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை மற்றும் புதன்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். இன்றைய தினம் பிரதோஷ விரதம் இருந்து சிவ வழிபாட்டினை செய்தால் பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும்.