மார்ச் 03 - இந்த நாளுக்குரிய ஸ்பெஷல் என்ன தெரியுமா ?

Aadmika
Mar 03, 2023,09:26 AM IST
இன்று மார்ச் 03 வெள்ளிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 19. ஏகாதசி - சுபமூகூர்த்த நாள். வளர்பிறை சமநோக்கு நாள்.



காலை 11.36 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. மாலை 05.48 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். காலை 06.28 வரை அமிர்தயோகம், பிறகு மாலை05.48 வரை சித்தயோகம், அதற்கு பிறகு மரரண யோகம்.


இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பேசவில்லை.. "கைலாசா தூதர்" விஜயப்பிரியா விளக்கம்!


நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 4.30 வரை

இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?

பெண் பார்க்க செல்வதற்கு, காது குத்துவதற்கு, புதிய வாகனங்கள் வாங்குவதற்கு, நிலத்தினை உழுவதற்கு ஏற்ற நாள்

யாரை வழிபட வேண்டும்?

இன்று மாசி மாத வளர்பிறை ஏகாதசி. அதிலும் வெள்ளிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை மேம்படும். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் கடன் தொல்லை தீரும், செல்வம் பெருகும்.