மதுரை இனி டோக்கியோவா மாற போகுது...வருகிறது ஹெல்த் வாக் டிராக்

Aadmika
Jun 24, 2023,03:02 PM IST
மதுரை : மதுரையில் டோக்கியோ நகரை போல் ஹெல்த் வாக் டிராக் அமைக்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த அதிகாரிகள் மதுரை வந்து சென்ற நிலையில், மதுரையில் 8 கி.மீ., தூரத்திற்கு ஹெல்த் வாக் டிராக் அமைக்கப்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியனும், மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர். ரேஸ் கோர்ஸ் சாலை முதல் ஆத்திகுளம் ஜங்ஷன் வரை இந்த டிராக் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மதுரையிலும், பிறகு 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் டிராக் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக மதுரையில் ஹெல்த் டிராக் அமைக்கப்பட உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் கார்டியோ வாஸ்குலர் நோய்கள் மற்றும் கேன்சரால் பாதிக்கப்படும் பெருமளவு குறையும். இது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழிவகுக்கும். இந்த டிராக்கின் இரு புறமும் மரங்கள் நடப்பட உள்ளது.

வாக்கிங் செல்வது பற்றிய விழிப்புணர்வு, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு முறையும் ஆரோக்கியம் தொடர்பாக விஷயங்கள் அமைக்கப்படும். நடைபயிற்சி மேற்கொள்வோர் இடையில் ஓய்வெடுப்பதற்கான இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் வாக்கத்தான் நடத்தப்படும் என்றார்.