மதுரை குலுங்க குலுங்க.. சித்திரை திருவிழா ஏப்ரல் 23 கொடியேற்றத்துடன் துவக்கம்!

Aadmika
Mar 30, 2023,03:47 PM IST

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதற்கான முழு அட்டவணையை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

2023 ம் ஆண்டிற்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி காலை 10.35 முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 30 ம் தேதி இரவு 07.05 மணி முதல் 07.29 மணி வரை மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.



மே 01 ம் தேதி திக்விஜயமும், மே 02 ம் தேதி காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மே 03 ம் தேதி காலை 06.00 மணிக்கு துவங்கி தேரோட்டம் நடைபெற உள்ளது. மே 04 ம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

மே 04 ம் தேதி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் மதுரை நோக்கி அழகர் புறப்படுகிறார். அன்ற மாலை மூன்று மாவடி பகுதியில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 05 ம் தேதி நடைபெற உள்ளது. தங்க குதிரையில், ஆயிரம் கால் சப்பத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.