பாலுடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாமா.. சாப்பிட்டா என்னாகும்?
Feb 06, 2023,11:20 AM IST
சென்னை : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக் கூடிய உணவு பால். அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் உணவு பால். சிலருக்கு உறவு தூங்குவதற்கு முன் பால் சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால் பாலை சாப்பிடுவதற்கு என்று முறை உள்ளது. பாலுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.
பாலுடன் சில பொருட்களை மட்டுமே சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு நன்மை தரக் கூடியதாக அமையும். சில உணவுகளை பாலுடன் சேர்த்து உண்ணுவது உடலில் பல விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அப்படி எந்தெந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம், எவற்றை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாது என இங்கே பார்க்கலாம்.
பாலுடன் எவற்றை எல்லாம் சாப்பிடலாம்?
* பாலுடன், வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் எளிதில் வெளியேற உதவும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
பாலுடன் எவற்றை சேர்த்து உண்ணக் கூடாது?
* மீன் சாப்பிட்டு விட்டு பால் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.
* தர்ப்பூசணி பழம் அல்லது வேறு நீர்சத்துள்ள பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்
* முள்ளங்கியுடன் பாலை சேர்த்து உண்ணவேக் கூடாது.
* தயிருடன் பால் கலந்து சாப்பிட்டால் அது குடலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
* ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற அசிடிக் தன்மை கொண்ட பழங்களுடன் பாலை சேர்த்து சாப்பிடக் கூடாது.
* கோழிக்கறி சாப்பிட்ட பிறகு பால் சாப்பிட்டால் அது மந்தத் தன்மையை ஏற்படுத்தி, வயிற்றில் புண்களை ஏற்படுத்தும்.
* பாலுடன் பப்பாளிப் பழத்தை சேர்த்து சாப்பிட்டால் ஜீரண சக்தி கடுமையாக பாதிக்கப்படும்.
* பாலும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண சக்தி கெடுவதுடன், வயிற்று பொறுமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.