இறையன்பு, சைலேந்திர பாபு இன்று ஒரே நாளில் ஓய்வு
Jun 30, 2023,11:28 AM IST
சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளராக சிதாஸ் மீனாவும், டிஜிபி.,யாக சஞ்சய் அரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வயது மூப்பின் காரணமாக இறையன்பு மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர் பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு கெளரள பதவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவும், உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரை இந்த பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.