2075ம் ஆண்டில் இந்தியா உலகின் நம்பர் 2 பொருளாதார வல்லரசாகும்!
Jul 10, 2023,04:52 PM IST
டெல்லி: 2075ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, உலகின் நம்பர் 2 பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா உயரும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா, உலகின் 5வது பொருளாதார சக்தியாக திகழ்கிறது என்பது நினைவிருக்கலாம். முதலிடத்தில் ஜெர்மனி உள்ளது. 2வது இடத்தில் ஜப்பான், 3வது இடத்தில் சீனா, நான்காவது இடத்தில் அமெரிக்கா ஆகியவை உள்ளன.
கோல்ட்மேன் சாஸ்க் முதலீட்டு வங்கி வெளியிட்ட ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் ��ிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சாந்தனு செங்குப்தா கூறுகையில், அடுத்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா பிற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கு வெகுவாக குறைந்து விடும். பிராந்திய பொருளாதார சக்திகளில் பெரிதானதாக இந்தியா உயர்ந்திருக்கும்.