டிஜிட்டல் பண பரிவர்த்தனை.. டாப் 5 நாடுகளில் இடம்பிடித்த இந்தியா
Jun 10, 2023,02:58 PM IST
டில்லி : டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் உலகின் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளதாக இந்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 2022 ம் ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் டிஜிட்டல் பணபரித்தனை நடந்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
புள்ளிவிபரங்களின் படி, 2022 ம் ஆண்டில் உலகில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடந்துள்ளது. மற்ற நான்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் வெகுவாக முன்னேறி உள்ளது.
உலகில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் 2வது இடத்திலும் (29.2 மில்லியன்), சீனா 3வது இடத்திலும் (16.5 மில்லியன்), தென் கொரியா 4வது இடத்திலும் (8 மில்லியன்) உள்ளன. கிராமப் புறங்களிலும் கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனை இந்தியாவில் அதிகம் பயன்படுத்த துவங்கியதால் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.