சீனாவை பின்னுக்குத் தள்ளி.. உலகின் நம்பர் 1 நாடானது இந்தியா.. மக்கள் தொகையில்!
Apr 19, 2023,02:22 PM IST
நியூயார்க் : உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சீனாவை விட இந்தியாவில் ஏறக்குறைய 3 மில்லியன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக ஐநா. கூறியுள்ளது.
2023 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த புள்ளி விபர அறிக்கையை ஐநா.,வின் UNFPA வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கிறது. 34 கோடி மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும் என முன்பே ஐநா கூறி இருந்தது. ஆனால் சரியான புள்ளி விபரம் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது எத்தனை மில்லியன் அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள்தொகையை துல்லியமாக கணக்கிடுவது முடியாத காரியம் என ஐநா தெரிவித்துள்ளது.