ஊழல் வழக்கில் இம்ரான் கானின் கட்சி தலைவர் கைது
Jun 02, 2023,03:39 PM IST
இஸ்லாமாபாத் : இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரான பர்வேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து கடந்த வாரம் தற்காலிக நிவாரணம் பெற்றார் பர்வேஸ். அவர் நெஞ்சுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவரது மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்தார் பர்வேஸ். இந்நிலையில் திடீரென பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வீட்டு காவலில் இருந்த பர்வேஸ் வீட்டில் இருந்து தப்ப முயன்றதாகவும், அவரை போலீசார் தடுத்து, கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.