தமிழில் இந்தியை திணிக்கவே முடியாது...ஆளுநர் ரவியின் ஓப்பன் டாக்
Apr 13, 2023,11:25 AM IST
சென்னை : தமிழ் மொழியில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ் மிக பழமையான மொழி என தமிழக ஆளுநர் ரவி, பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசினார்.
விழாவில் அவர் பேசுகையில், தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் தமிழ் மீது திணிக்க முடியாது. தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிற்கு 3500 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முந்தைய வரலாறும் உள்ளது. தமிழ் மொழி இல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நிவைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழை ஆழமாக படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.