ஆரோக்கியமான உணவு தான்.. ஆனால் கொஞ்சம் அசந்தா உயிருக்கு ஆபத்து பாஸ்!

Aadmika
Feb 12, 2023,03:07 PM IST

சென்னை : ஆரோக்கியமான உணவுகள், சத்தான உணவுகள், ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் என உணவுப் பொருட்கள், பழங்கள் என அனைத்திலும் நாம் பல வகைகளாக பிரித்து வைத்துள்ளோம். ஆனால் ஆரோக்கியமான உணவுகள், வைட்டமின்கள் அதிகம் கொண்ட உணவுகள் அல்லது பழங்கள் என நினைத்து காலம் காலமாக நாம் சாப்பிட்டு வரும் பல உணவுகள் பொருட்கள், விஷ தன்மை கொண்டதாக உள்ளது என்பது பற்றி தெரியுமா?


அப்படி ஆரோக்கியமும் தரும், உயிரை பறிக்கும் விஷமாகவும் மாறும் உணவுகள் பற்றி தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.


பிரெளன் அரிசி :


பிரெளன் அரிசியில் குறைந்த அளவிலான ஸ்டார்ச் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளதால் இது வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானது என அனைவருக்கும் தெரியும். இதை டாக்டர்கள் பலரே பரிந்துரைக்கிறார்கள். பிரெளன் அரிசி அதிக சத்துக்கள் நிறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இது உடலில் விஷ தன்மையையும் ஏற்படுத்தக் கூடியதாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் போன்றவைகள் வரவும் வாய்ப்புள்ளது.


தேன் : 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மருந்தாக பரிந்துரை செய்யப்படுவது தேன். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கையில் எடுக்கும் முதல் பொருள் தேன் தான். அதே போல் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களில் நாட்டு சர்க்கரைக்கு அடுத்த இடத்தை பிடிப்பது தேன் தான். இது உயிரை குடிக்கும் அளவிற்கு பெரிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தா விட்டாலும் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் ஆகியவற்றை பாதிப்புக்களை உடலில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.


முளைக்கட்டிய பாசிப்பயிறு :


உடல் எடையை குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என நாம் சாப்பிடும் மற்றொரு உணவுபெ பொருள் Sprouts என சொல்லப்படும் முளைக்கட்டிய பாசிப்பயிறு.  இது உடலுக்கு நன்மை தரக் கூடியது தான் என்றாலும், சரியாக சுத்தம் செய்யாமல் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சால்மோனெல்லா வகை பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய் பாதிப்புக்கள் ஏற்படும்.


மாதவன் மகனா கொக்கா.. நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்று அசத்தல்!


பதப்படுத்தப்படாத சீஸ் : 


உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள் உடல்நலத்தை கெடுத்து விடும் என்பதால் பதப்படுத்தப்படாத பல உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அதில் ஒன்று பதப்படுத்தப்படாத பாலாடை கட்டிகள். ஆரோக்கியமானது என நாம் வாங்கி வரும் பதப்படுத்தப்படாத சீஸ்கள் வீட்டிற்கு பல விதமான பாக்டீரியாக்களையும் அழையா விருந்தாளியாக அழைத்து வந்து விடுகிறது. இதை நாம் சாப்பிடும் போது கடுமையான வயிற்குப் போக்கு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.


மைக்ரோவேவ் பாப்கான் :


கடைகளில் விற்கும் பாப்கான் சுத்தமானதாக இருக்காது என வீட்டிலேயே மைக்ரோவேவ் ஓவன் அல்லது நான்ஸ்டிக் குக்கர்களில் பாப்கார்ன் செய்கிறோம். இதன் அடிப்பாகம் உணவுப் பொருட்கள் பாத்திரத்துடன் ஒட்டாமல் இருப்பதற்காக கொடுக்கப்படும் கோட்டி��்கள் நச்சுத்தன்மை கொண்டவை. இதில் பொரிக்கும் பாப்கானை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய், கல்லீரன் புற்றுநோய் போன்றவை வரும்.


ஆப்பிள் :


ஆ��்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பலவிதமான சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்த பழம். ஆனால் இதன் விதைகள் ஆரோக்கியமானவை அல்ல. கொடிய விஷத் தன்மை கொண்ட சையனைடிற்கு சமமானவை. இதை தெரியாமல் சாப்பிடும் போது ஆரம்பத்தில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து இதே போல் சாப்பிட்டு வந்தால் உடலில் விஷத்ததன்மை அதிகரித்து, உயிரையே குடிக்கும் ஆபத்தானது.