சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

Aadmika
Jan 31, 2023,10:46 AM IST
சென்னை : முதல் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதால் 3 நாட்களுக்கு சென்னை நகரில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



29 நாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஜி20 கல்வி செய்குழு மாநாடு ஜனவரி 31 ம் தேதி துவங்கி பிப்ரவரி 02 ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பன்னாட்டு பிரதிநிதிகள் செனன்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்கி, ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து 01 ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதன் காரணமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 02 வரை சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், விழா நடக்கும் இடங்களிலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடங்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்கள் ரெட் ஜோன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.