செல்ஃபி எடுக்க வந்த ரசிகையுடன் லவ்..  நிச்சயதார்த்தம்.. கலக்கிய சாம்பியன் கார்பின்!

Aadmika
Jun 01, 2023,11:14 AM IST
பிரான்ஸ் : தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட ரசிகையேயே கைப் பிடிக்கவுள்ளார் டென்னிஸ் வீரர் முகுருசா.

முன்னாள் பிரெஞ்ச், விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனான கார்பின் முகுருசா தனது நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு தனது சுவாரஸ்ய காதல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். 

2021 ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த அமெரிக்க  ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற போது, செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என வந்தார் ஒரு ரசிகை.  அந்த ரசிகைக்கு செல்பிக்கு போஸ் கொடுத்தபோது கூடவே இருவருக்குள்ளும் காதலும் ஒட்டிக் கொண்டது. பிறகு அந்த  ரசிகையை காதலித்து, தற்போது திருமணமும் செய்து கொள்ள போகிறார் கார்பின். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.



தனது காதல் நினைவுகளை பகிர்ந்து கொண்ட கார்பின், சென்ட்ரல் பார்க்கிற்கு அருகில் தான் நான் தங்கிருந்த ஹேட்டல் இருந்தது. ரொம்ப போர் அடித்ததால் கொஞ்சம் வெளியில் ஒரு வாக் செல்லலாம் என தோன்றியது. வெளியில் போய், தெருக்களில் காலாற நடந்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென அவர் என் முன் வந்து நின்றார். அமெரிக்க ஓபனில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டார். அவர் போன பிறகு தான், வாவ்...எவ்வளவு ஹேண்ட்சமாக இருகு்கிறார் என எனக்கு தோன்றியது. அதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் சந்திக்க துவங்கினோம். அதிக நேரம் இருவரும் ஒன்றாக செலவிட்டோம். நிறைய பேசினோம். சென்ட்ரல் பார்க்கை சுற்றி நிறைய நடந்துள்ளோம்.

போர்க்ஸ் டென்னிஸ் விளையாடியது கிடையாது. அவர் ஃபேஷன் துறையில் பணியாற்றி வருகிறார். ஒருநாள் திடீரென ஏதோ சொல்ல வேண்டும் என்றார். நான் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ப்ரொபோஸ் செய்தார். அவர் காதலை சொன்ன போது நான் அழுது விட்டேன். எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை. கண்ணீருடன் அவருக்கு ஓகே சொன்னேன். அது ரொம்பவே ரொமான்டிக்கான தருணம் என்றார்.

தனது 3 வது வயதில் டென்னிஸ் விளையாட துவங்கிய கார்பின், டென்னிஸ் விளையாட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். டென்னிஸ் தவிர சமைப்பது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது ஆகியனவும் இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களாம்.