சென்னை பள்ளி மாணவர்களுக்கு "ஈவ்னிங் ஸ்நாக்ஸ்"... பட்ஜெட்டில் அசத்திய மேயர்
Mar 27, 2023,11:08 AM IST
சென்னை : சென்னையில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என சென்னை பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியார் அறிவித்தார். இது இவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் ஆகும்.
ப்ளஸ் பொது தேர்வில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் தனி கவனம் செலுத்தி சுகாதாரம் மற்றும் சுத்தம் பாதுகாக்கப்படும். அப்படி செயல்படும் 3 வார்டுகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் சென்னை பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மேயர் பிரியா, இன்று சென்னை மாநகராட்சிக்கான 2023-2024 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புக்களில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும். மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1500 ஊக்கத்தெகை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 ஆசிரியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 20 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இசை வகுப்புக்களுக்கான இசைக்கருவிகள் வாங்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.