ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... முதல் சுற்றில் சுயேட்சையிடம் வீழ்ந்த தேமுதிக
Mar 02, 2023,12:45 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை விடவும் தேமுதிக வேட்பாளர் மிக குறைவான ஓட்டுக்களை பெற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தேமுதிக வேட்பாளர் அவரை முந்தி விட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக இருக்க, மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை விட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா அதிக வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளரான முத்து பாவா 178 ஓட்டுக்களும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் தேமுதிகவை சுயேச்சை முந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது சுயேச்சை பின் தங்கி விட்டார், தேமுதிக சற்று கூடுதல் வாக்குகளைப் பெற்று தப்பியது.