உதயநிதி நடிச்ச மாமன்னன் படமா முக்கியம்?...விளாசி தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி

Aadmika
Jul 05, 2023,03:54 PM IST
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரையில் நடக்க இருக்கும் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாநாட்டின் புதிய லோகோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். ஆகஸ்ட் 20 ம் தேதி மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதோடு 2024 ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.



கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 75 நாட்களில் 1.60 கோடி பேர் அதிமுக.,வில் சேர்ந்துள்ளனர். இது திமுக.,விற்கும் அவர்களின் பி டீமுக்கும்க மிகப் பெரிய பின்னடைவு. காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது. தமிழகத்தில் காவிரி தண்ணீரை கொடுக்க கூடாது என்பதற்காக நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு எதிரானது.

அனைத்திந்திய அளவில் மிக��் பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருவதாக திமுக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் தவது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை காவிரி விவகாரத்தில் சரிகட்ட எதுவும் செய்யவில்லை. அனைவரும் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவா இப்போது முக்கியம்?

திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போது சபாநாயகர் தனபால் எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர் என இழிவாக பேசியது. தற்போது எஸ்சி சமூகத்தினரின் நலங்கள் பற்றி திமுக பேசுகிறது. எஸ்சி சமூகத்தினர் இழிவுபடுத்தப்படுவது பற்றி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி உதயநிதி படம் எடுத்துள்ளார் என்றார்.