"ஓ வெரிகுட்".. வந்தே பாரத் ரயிலைச் சுற்றிப் பார்த்து.. வியந்து போன தமிழிசை செளந்தரராஜன்!

Su.tha Arivalagan
Jun 26, 2023,01:18 PM IST
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 25வது வந்தே பாரத் ரயிலை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 25வது வந்தே பாரத் ரயிலை முடித்து அசத்தியுள்ளது சென்னை ஐசிஎப்  ரயில் பெட்டி தொழிற்சாலை. இதைத் தொடர்ந்து 25வது வந்தே பாரத் ரயிலை சுற்றிப் பார்க்க விரும்பி அங்கே சென்றார் டாக்டர் தமிழிசை.



ரயிலைப் பார்க்க வந்த தமிழிசைக்கு ரயிலை சுற்றிக் காட்டி அதிகாரிகள் அதில் உள்ள வசதிகள், சிறப்புகளை விளக்கிக் கூறினர். அதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்ட தமிழிசை அதிகாரிகளைப் பாராட்டினார். எமர்ஜென்சி ஏதாவது ஏற்பட்டால் டிரைவருடன் பயணிகள் நேரடியாக பேசும் வசதியும் இந்த ரயிலில் இருப்பதாக அதிகாரி கூற அதைக் கேட்ட தமிழிசை, ஓ வெரிகுட் என்று பாராட்டினார்.

இதுகுறித்து டாக்டர் தமிழிசை போட்டுள்ளடிவிட்டீல்,  சென்னை, ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட 25-வது வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்டு சென்னை, ஐ.சி.எப் இரயில்வே  மேலாளர், அலுவலகப் பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவித்தேன்.

வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்ட இரயில்களை தற்போது அதிநவீன  வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்களை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு ���ிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை.