மோடி பேசிய.. வீடியோவுடன் வந்த அண்ணாமலை.. "அந்தோ பரிதாபம்".. நக்கலடித்த சரவணன்!

Su.tha Arivalagan
Jun 28, 2023,09:39 AM IST
சென்னை: மத்தியப் பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுக குறித்துக் கூறிய வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் போட, அதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன் பதிலடி கொடுத்து கமெண்ட் போட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான முன்னெடுப்பு வேலைகளை பாஜக தொடங்கி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று போபாலில் நடந்த பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.



பிரதமர் மோடி பேசும்போது வாரிசு அரசியலை மேற்கோள் காட்டிப் பேசினார். பல்வேறு மாநிலங்களில் அரசியலில் இருந்து வரும் குடும்பங்கள் குறித்து அவர் பேசினார். அந்த வகையில் திமுக குறித்துப் பேசும்போது, திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் மகன், மகள், பேரன் பேத்திகள்தான் பலன் அடைவார்கள். எனவே பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார். 

இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் போட்டிருந்தார். அந்த டிவீட்டுக்கு திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரும், டிவி விவாதப் பேச்சாளருமான சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் போட்டுள்ள பதில் டிவீட்டில்,  அந்தோ பரிதாபம்!  திமுக எப்பொழுது மத்திய பிரதேச தேர்தலில் போட்டியிடப்போகிறது? 

கிலி!  தமிழ் நாட்டின் முதல்வரைக்கண்டு அச்சம்! 

பாஜகவிற்கு வாக்களித்தால் அமித் ஷா மகன் ஜெய் ஷா என்னவாவார்?  இந்தியாவிற்காக  10 சிக்ஸர் அடிப்பாரா???  #பாஜகபரிதாபங்கள் என்று நக்கலடித்துள்ளார் சரவணன் அண்ணாதுரை.

சரமாரி கமெண்ட்டுகள்

இதற்கிடையே, பிரதமரின் பேச்சு டிவிட்டரில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டுக்கு என்னெல்லாம் கிடைத்தது என்பதை பட்டியலிட்டு திமுகவினர் பலரும் டிவீட் போட்டு வருகின்றனர். சென்னையில் கத்திப்பாரா பாலம் கிடைத்தது, டைடல் பார்க் கிடைத்தது, வள்ளுவர்கோட்டம் கிடைத்தது, அண்ணா மேம்பாலம் கிடைத்தது, மதுரையில் கலைஞர் நூலகம் கிடைத்தது, சென்னையில்  அண்ணா நூலகம் கிடைத்தது என்று அவர்கள் பட்டியலைப் போட்டு பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.