ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைக் கண்டித்து.. கருப்பு உடையில் களம் இறங்கிய காங்கிரஸ்!

Baluchamy
Mar 27, 2023,02:23 PM IST
டெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தலைவர்களும் களம் குதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்விட் செய்திருந்தார். அதேபோல் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்விட் செய்திருந்தார். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். 



இந்நிலையில் பாஜக கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்தும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததையும் கண்டித்து இந்தியா முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் இன்று தொடர் போராட்டத்தில் குதித்தனர். கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல நாடு முழுவதும் கருப்பு உடையுடன் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.