குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் அவசியமில்லை.. இது சீனாவில்!
Feb 02, 2023,11:27 AM IST
பீஜிங் : திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என சீனாவின் சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என்ற சட்டம் பல காலமாக சீனாவில் அமலில் இருந்து வருகிறது. இதனால் கருக்கலைப்புக்கள் அதிகம் நடைபெற்றன. இந்த காரணத்தால் இந்த கொள்கை 2016 ல் ரத்து செய்யப்பட்டது.
சீனாவில் பல காலமாக இருக்கும் கட்டுப்பாடு காரணமாக பிறப்பு விகிதம் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரிக்க துவங்கியது. இதனால் திருமணமாகாதவர்களும் கூட மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இருந்த போதிலும் கடந்த ஆண்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவாக மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இதனால் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாண அரசு, குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் ஆகாதவர்களும் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.