சரத் பவாரும் ஒரு நாள் மோடியை ஆதரிப்பார் : பகீர் கிளப்பும் பாஜக

Hamridha
Aug 18, 2023,11:27 AM IST
நாக்பூர் : தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் ஒருநாள் பிரதமர் மோடியை ஆதரிப்பார் என மகாராஷ்டிர பாஜக தலைவர் பேசி உள்ளது, மகாராஷ்டிர அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூர் விமான நிலையம் வந்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலேவிடம், சரத் பவார்  மற்றும் அஜித் பவார் ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கொண்டது பற்றி தெய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சந்திரசேகர பவன்குலே, இந்தியாவை வலிமையானதாக, தன்னிறைவு உள்ளதாக மாறி வருவதை பார்த்து பிரதமர் மோடியை, சரத்பவார் ஒரு நாள் ஆதரிப்பார் என்றார்.



சரத் பவார் - அஜித் பவார் ரகசிய சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த சந்திர சேகர பவன்குலே, இது அவர்களின் குடும்ப சந்திப்பு என சரத் பவாரே விளக்கம் அளித்து விட்டாரே. சரத் பவாரின் கனவை மோடி நிறைவேற்றி வருவதால், நிச்சயம் அவரது ஆதரவு மோடிக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளார். சரத் பவார் தற்போது வரை எதிர்க்கட்சிகள் நடத்திய எந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்ளாமலும், இ-ந்-தி-யா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்காமலும் உள்ளதால் அவர் பாஜக.,வுடன் இணைவார் என பாஜக வட்டாரத்தில் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 8 பேருடன் வந்து ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்தார். இதற்கு பிறகு சரத் பவாரும், அஜித் பவாரும் ரகசியமாக சந்தித்து கொண்டது தான் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிர அரசியலில் பரபரப்ான விஷமாக பேசப்பட்டு வருகிறது.