தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. நாடு முழுவதும் முஸ்லீம்கள் தொழுகை

Su.tha Arivalagan
Jun 29, 2023,10:08 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தினர் சிறப்புத் தொழுகை செய்து வழிபட்டனர்.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்கள் காலையிலேயே சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி, பதேபூர் மசூதி உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். போபாலில் உள்ள மசூதியிலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.



அனைத்து நகரங்களிலும் தொழுகைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கம் போல கொண்டாடப்பட்டது. குர்பானி கொடுக்கப்பட்டது. முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், முஸ்லீம்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுக்கப்படுவது வழக்கம். இதையொட்டி தமிழ்நாட்டிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் ஆடு விற்பனை களை கட்டியிருந்தது. அதன் வர்த்தகமும் அதிகமாகவே இருந்தது.