இனி பார்லர் வேண்டாம்...இந்த 2 பொருள் இருந்தால் முகம் பளிச்சுன்னு இருக்கும்

Aadmika
Jan 07, 2023,10:29 AM IST
முகம் அழகாக இருக்க வேண்டும். தான் எப்போதும் பளிச்சென தெரிய வேண்டும். தனது அழகை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. இதற்காக மாதம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பியூட்டி பார்லர் போக வேண்டும். விலை உயர்ந்த க்ரீம்கள், விளம்பரங்களில் வரும் பவுடர்களை பயன்படுத்தினால் தான் அழகாக இருக்க முடியும் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஆனால் நமது பாட்டிக்கள் எல்லோரும் பார்லர் போகாமலேயே வீட்டிலேயே அழகை பராமரித்தார்கள். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே. இந்த காலத்திற்கு அது சரியாக வராது என பலர் நினைக்கலாம். எந்த காலம் ஆனாலும் நாம் அழகிற்கு பயன்படுத்தும் பொருட்களின் தன்மை மாறாது என்பது தான் உண்மை. அப்படி வீட்டில் உள்ள இரண்டே இரண்டு பொருட்களை பயன்படுத்தி எப்படி முகத்தை பளிச்சென வைத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

நமது சருமம் எந்த வகையானது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி முகத்திற்கு பேக் போட்டுக் கொண்டாலே போதுமானது. இதை தினமும் செய்ய வேண்டும் என்பது கிடையாது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை இந்த பேக்கினை வெறும் 10 நிமிடங்கள் போட்டால் போதும்.

அப்படியே வீட்டிலேயே முகத்தை பளிச்சென்று ஆக்கும் பொருள் வேறு எதுவும் இல்லை கடலை மாவு தான். எல்லா வகையான சருமத்திற்கும் ஒரே வகையான பேக் போட முடியாது. அதனால் எந்த வகை சருமத்திற்கு என்ன பொருளை கடலை மாவுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வறண்ட சருமம் - கடலை மாவுடன் சோற்றுக் கற்றாலை அல்லது வாழைப்பழக்கை சேர்த்து பேக் போட வேண்டும்.

சென்சிடிவ் சருமம் -  கடலை மாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேக் போடலாம். ரோஸ் வாட்டருக்கு பதில் பன்னீர் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய் பிசுக்கான சருமம் - கடலை மாவுடன் டீ டிக்காஷனை சிறிது சேர்த்து பேக் போடலாம். 

சாதாரண சருமம் - கடலை மாவுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் ஆயில், சிறிது முல்தாணிமட்டி சேர்த்து பேக் போடலாம்.

பருக்கள் அதிகம் உள்ளவர்கள் - கடலை மாவை க்ரீன் டீயுடன் கலந்து பேக்காக போடலாம்.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை போட்டுக் கொள்ளலாம். பேஸ்பேக் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே உலற விட வேண்டும். பேக் நன்கு காய்ந்து, முகத்தை இழுப்பது போன்ற நிலை வந்ததும் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். மெதுவாக ஸ்கரப் செய்து பேக்கை நீக்கினால் முகம் பளிச்சென்று ஆகி விடும். குளிர்ந்த நீர் உடலுக்கு ஏற்றுக் கொள்ளும் என்பவர் குளிர்ந்த நீரை பயன்படுத்தியும் முகத்தை கழுவலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளிச்சென்று பொலிவுடன் காணப்படும்.