பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் செக்ஸ் டார்ச்சர்...பகீர் கிளப்பிய ஆஸ்திரேலிய பெண் எம்பி

Aadmika
Jun 15, 2023,02:34 PM IST
சிட்னி : பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் வைத்து தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், பார்லிமென்ட் பெண்கள் வேலை செய்வதற்கு பாதுகாப்பான இடம் கிடையாது என்றும் ஆஸ்திரேலிய பெண் எம்பி வெளிப்படையாக குற்றம்சாட்டி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சுயேட்சை எம்பி.,யான லிடியா தோர்பி இது பற்றி கூறுகையில், ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் மிகவும் பவருடன் இருக்கும் ஒரு நபர் தன்னிடம் பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசியதாகவும், படிக்கட்டின் மூலையில் தன்னை தள்ளி விட்டு தகாத முறையில் தொட்டதாகவும் தெரிவித்தார். 



இவர் பாலியல் புகார் தெரிவித்ததும் செனட் சபையை சேர்ந்த ஒருவர், தனது குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறும் படி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் லிடியா தெரிவித்துள்ளார். லிடியா இது போல் பாலியல் குற்றச்சாட்டிய நபர் வேறும் யாரும் அல்ல, பழமைவாத கட்சியை சேர்ந்த டேவிட் வேன் என்பவர் மீது தான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வேனின் கட்சியும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

லிடியா, டேவிட் மீது சொன்ன பாலியல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவதூறு சட்டங்களை பயன்படுத்தி பாதுகாக்கப்படுவதாக லிடியா தரப்பு குற்றம்சாட்டி உள்ளது. பாரக்லிமென்ட் விதிகளில் உள்ள ஓட்டைகளையும், வழக்கறிஞர்களையும் வைத்து இந்த குற்றச்சாட்டுக்களை அவர் நீர்த்து போக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தான் பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் தனியாக நடந்து செல்ல பயப்படுவதாகவும், தனது அறையின் கதவை லேசாக திறந்து வெளியே பார்த்து விட்டு, பிரச்சனை ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து பிறகு தான் அறையை விட்டு வெளியே வருவதாகவும், யாராவது ஒருவர் கூட இருந்தால் மட்டுமே பார்லிமென்ட்டில் தன்னால் நடந்து செல்ல முடிகிறது. இதே போன்ற பிரச்சனைகளை மற்ற பெண் உறுப்பினர்கள், ஊழியர்கள் எதிர்கொண்டிருப்பது தனக்கு தெரியும் என்றும் லிடியா தெரிவித்துள்ளது.

பார்லிமென்ட்டிற்கு உள்ளாகவே தனது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், பலரும் இது போல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவில் பெண் எம்பி ஒருவரே பகிரங்கமாக உறுதி பட பேசி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.