லாக்டவுன் சமயத்தில் ரொம்ப தூரம் சுற்றித் திரிந்த கால்நடைகள்.. ஆய்வில் சுவாரஸ்யம்

Su.tha Arivalagan
Jun 09, 2023,04:41 PM IST
டெல்லி: லாக்டவுன் அமலாக்கப்பட்ட சமயத்தில் பாலூட்டிகள் தாங்கள் வழக்கமாக புழங்கும் தூரத்தை விட அதிக அளவிலான தூரத்திற்குப் பயணித்ததாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

2020ம் ஆண்டு தொடக்கத்தை யாரும் மறந்திருக்க முடியாது. உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா ஆட்டிப்படைத்த காலம் அது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.



ஆனால் விலங்குகள்தான் இந்த காலகட்டத்தில் அதிக அளவில் சுதந்திரமாக நடமாடின. வெளிநாடு ஒன்றில் காட்டு விலங்குகள் எல்லாம் ஊருக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த வீடியோக்கள் வெளியாகியது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், இந்த லாக்டவுன் சமயத்தில் பாலூட்டிகள் வழக்கமாக போகும் தூரத்தை விட 73 சதவீதம் அதிக தூரத்திற்குப் பயணித்ததாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.  வாகன நடமாட்டம் குறைந்திருந்ததால் விலங்குகள் அதிக அளவில் பயணிக்க ஆரம்பித்தன. என்னெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் பயணமாக இவை அவர்களுக்கு அமைந்தன.

அ���ேபோல வனப் பகுதிகளில் இருந்த பல முக்கியமான விலங்குகள் சாலைகளுக்கும், ஊர்களுக்கும் வர ஆரம்பித்ததையும் நாம் கண்டோம். மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அதிக அளவில் விலங்குகள் நடமாட்டம இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.