"ரொம்ப சந்தோஷப்படாதீங்க".. ஊழல்வாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Jul 12, 2023,10:10 AM IST
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை 3வது முறையாக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது சட்டவிரோதமான நடவடிக்கை என்று அறிவித்து ஜூலை 31ம் தேதியுடன் மிஸ்ராவின் பதவிக்காலம் முடியம் என்று உத்தரவிட்டுள்ளது.



இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில்  அமித் ஷா டிவீட் ஒன்றைப் போட்டார். அதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சிலர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஆனால் அது வெறும் கானல் நீர் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

சிவிசி சட்டத் திருத்தத்தை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளது. இந்த சட்டமானது நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்ட ஒன்று. தவறான முறையில் பணம் சேர்த்து, சொத்து குவித்து, ஊழல் செய்வோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து இதே வேகத்தில் செயல்படும். அதில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் சார்ந்ததல்ல அமலாக்கத்துறை. அது ஒரு அரசியல் சாசன அமைப்பு. தனது முக்கிய குறிக்கோளை நோக்கி மட்டுமே அது நகர்ந்து வருகிறது. பண மோசடி, அந்நியச செலாவணி மோசடி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாக செயல்படும்.

அஜித் என்னை ஏமாத்திட்டாரு... பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்

எனவே அமலாக்கத்துறை இயக்குநர் யார் என்பது இங்கு பிரச்சினை இல்லை. யார் அந்தப் பதவிக்கு வந்தாலும், தொடர்ந்தாலும், ஊழலுக்கு எதிரானவர்கள் மீதான நடவடிக்கையில் சற்றும் தொய்விருக்காது.. ஊழல்வாதிகள் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்  அமித் ஷா.

அமித் ஷா விடுத்துள்ள இந்த எச்சரிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறையின் நாடு தழுவிய நடவடிக்கைகள் மேலும் வேகம் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சியினரை ஒடுக்கவும் வழிக்கு கொண்டு வரவும் தனக்கு அடிபணிய வைக்கவும் அமலாக்கத்துறையை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்